பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொரோனா மன்னாரில் பூரண ஒத்துழைப்பு

மன்னார் மாவட்ட மக்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு நேற்று மாலை 6 மணி முதல் தற்போது வரை பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.


குறித்த ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும்.


இன்றைய தினம் சனிக்கிழமை காலை முதல் மன்னார் மாவட்டம் மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியான முறையில் காணப்படுகின்றது.
பொலிஸார், இராணுவம் மற்றும் கடற்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


அவசர தேவைகளுக்காக ஒரு சில இடங்களில் தனித்தனியே மக்களின் நடமாட்டம் இடம் பெறுகின்றது.எனினும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


குறிப்பாக வைத்திய சேவை உற்பட அவசிய தேவைகளுக்கு செல்கின்ற போது பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.


மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். மேலும் வேறு மாவட்டங்களில் இருந்து மன்னார் நகருக்குள் வருகின்ற வாகனங்கள் தொடர்பாக பொலிஸார் கூடிய கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சகோதர்களுக்கிடைய பனிப்போர் நடைபெறுகின்றது.

wpengine

மன்னாரில் மூன்றாவது முறை உடைக்கப்பட்ட பிள்ளையார்!இந்துக்கள் விசனம்

wpengine

துறவிகளால் ஆரம்ப நிலையிலுள்ள சிறுவர் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம்

wpengine