பிரதான செய்திகள்

கொரோனா தாக்கம் தேர்தல் ஒத்திவைக்க முடியும்

எதிர்வரும் மாதம் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.


எதிர்பார்த்ததனை போன்று ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு குறித்த திகதியில் தேர்தல் நடத்தப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.


தற்போது தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெறும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் மார்ச் மாதம் 26ஆம் திகதி தீர்மானிக்கப்படும்.


ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு பின்னர் வேலை செய்யும் 14 நாட்களின் பின்னர் ஒரு நாள் தேர்தல் நடத்தப்படும் நாளாக இருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

Related posts

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு

wpengine

துருக்கி இராணுவப் புரட்சி! சதிகாரர்கள் யார்?

wpengine

நாடு முழுவதும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அடையாள வேலை நிறுத்தம்

wpengine