பிரதான செய்திகள்

கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்கள் நியமனம்

திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரிகள் இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து கடமைகளை பொறுப்பேற்பதற்காக கையொப்பமிட்டுள்ளனர்.


குறித்த பட்டதாரிகள் அனைவரும் நாளை முதல் கொரோனா தடுப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தெரிவித்தார்.


கிண்ணியா பொது சுகாதார பணிமனையின் கீழ் குறித்த பயிலுனர் பட்டதாரிகள் நியமிக்கவுள்ளார்கள்.
இவர்களுக்கான கடமை தொடர்பான விடயங்களை பிரதேச செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.


குறித்த நிகழ்வில் கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி போன்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

சாணக்கியனுக்கு கல்முனை நீதி மன்றம் அழைப்பாணை

wpengine

கொலையாளி இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.

wpengine

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுமா? அதிகாரம் ஜனாதிபதியிடம்.

wpengine