கொரோனா கடவுள் தந்த ஒரு வரம் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். புதன்கிழமை தனது அலுவலகத்திற்கு சென்று வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘எனக்கு கொரோனா வந்தது கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுகொடுத்திருக்கிறது’ என கூறி உள்ளார்.

மேலும், சீனாவால் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் உலகத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய சீனா அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares