கொரோனா அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய நடைமுறை

மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அரச ஊழியர்கள் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் அரச தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையில்,


தற்போது மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளைய தினம் நீக்கப்படுகின்றது.


சுகாதார நிலைமையை கருத்திற்கு கொண்டு அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை அழைக்கும் போது, கடமைகளை அத்தியாவசிய மற்றும் குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரமே அழைக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.


நிறுவனத்தின் பிரதானிகளினால் குறைந்தபட்ச ஊழியர்கள் தொடர்பில் தீரமானம் மேற்கொளள் வேண்டும்.


ஏனைய ஊழியர்கள் தற்போது பணியாற்றுவது போன்று வீட்டில் இருந்தே கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares