செய்திகள்பிரதான செய்திகள்

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – இருவர் காயம் !

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மன்னார்- பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

wpengine

எல்லை தாண்டிய தமிழக மீனவருக்கு 14 மாத சிறைத்தண்டனை!

Editor

அரசியலுக்காக சட்டரீதியான மண் அகழ்வை தடை செய்யும் மஸ்தான்

wpengine