பிரதான செய்திகள்

கொகேய்ன் விவகாரம்; 3.2 பில்லியன் ரூபா பெறுமதியானது – 07 பேர் கைது

றத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கொகேய்ன் போதைப் பொருள் தொடர்பில் சந்தேகநபர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து 218 கிலோவும் 600 கிராம் நிறையுடைய கொகேய்ன் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றின் பெறுமதி 3.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமானது என்று கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் கல்கிஸ்ஸ பொலிஸாரினால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை கண்டெடுக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 07 பேரையும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மன்னார்,மடுவில் உருக்குலைந்த நிலையில் சடலம்.

wpengine

மன்னார்- உயிலங்குளம் Gas வினியோகத்தில் மோசடி பலர் விசனம்

wpengine

இருத்தலுக்கான இறுதி விளிம்பில் ஜெனீவாக் களம்!

wpengine