கையடக்கத் தொலைபேசியில் (கொரோனா) வைரஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொவிட் 19 (கொரோனா) வைரஸ் கையடக்கத் தொலைபேசியின் திரைகளில் உயிர்வாழ்ந்து தொற்றும் ஆபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் தும்மும் போதும் இருமும் போதும் வெளியேறும் வைரஸ், கையடக்கத் தொலைபேசியின் திரையில் ஏழு நாட்கள் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் மூலம் கண்டறியப்பட்டள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளின் திரையை நாள் ஒன்றுக்குக்கு இரு தடவைகள் சவர்க்கார நீரில் நனைக்கப்பட்ட துணியைப் பயன்படுத்தி தொற்று நீக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் படுக்கையறைகளிலும் கழிவறைகளிலும் அதிகம் காணப்படுவதாக சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

 214 total views,  3 views today

Comments

comments

Shares