கையடக்கத்தொலைபேசியை ஆராய்ந்த கணவனின் கைவிரல்கள் மனைவியால் துண்டிப்பு

தனது கையடக்கத்தொலைபேசியை ஆராய்ந்த கணவனின் கைவிரல்கள் மனைவி துண்டித்த சம்பவமொன்று பெங்களுரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மனைவி இரவுணவை தயாரிக்காது தனது கையடக்க தொலைபேசியில் மும்முரமாக இருந்துள்ளார். இதன் போது வீட்டிற்கு வந்த அவரின் கணவன் மனைவியின் செயலைக்கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.1463482593950

இதையடுத்து இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதுடன் கணவன் மனைவியின் கையடக்கத்தொலைபேசியை பறித்து ஆராய முயன்றுள்ளார்.

இதையடுத்து கோபமடைந்த மனைவி கணவனது கை விரல்களை கத்தியால் துண்டித்துள்ளார்.

இதையடுத்து கணவன் பொலிஸ் நிலையத்திற்குசென்று மனைவி தன்னை மிரட்டியதாக முறைபாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares