கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி தம்மாலோக்க தேரர் மனுதாக்கல்

கைது செய்யப்படுவதை தடுத்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உடுவே தம்மாலோக்க தேரர் உயர்நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.யானை குட்டி ஒன்றை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி தன்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தன்னை கைது செய்வதை தடுத்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு தம்மாலோக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டால் தனது அடிப்படை உரிமை மீறப்படும் எனவும் இதற்காக தனக்கு இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாவை இழப்பீடாக பெற்று தர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சுதத் நாகாமுல்ல மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares