பிரதான செய்திகள்

கூட்டமைப்பு அதன் கொள்கையில் இருந்து உலகி உள்ளது ஹரீஸ் பா.உ

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களுடைய மாகாணம் தனி மாகாணமாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர் என பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த 60 ஆண்டு கால போராட்ட வாழ்க்கையைப் பார்க்கும் போது, கூட்டமைப்பு அதன் கொள்கையில் இருந்து தற்போது விலகி போகின்றது.

கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நீண்டகாலமாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உறவுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

தெலியாகொன்னை பிரதேசத்திற்க்கு நிரந்தரமாக தாய்சேய் நிலையம் அஷார்தீன் மொய்னுதீன்

wpengine

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் தேர்தல் இல்லை

wpengine