பிரதான செய்திகள்

கூட்டமைப்புக்கு எதிரான மஹிந்த! பதில் வழங்குவேன் இரா.சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதில் வழங்கியுள்ளார்.

இதன்படி, மகிந்த ராஜபக்சவின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் தக்க பதில் வழங்குவேன் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண பல தடவைகள் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியிருந்தோம்.

எனினும், அவர் அதனை நிராகரித்திருந்தார். அன்று சம்பந்தன், எங்களுடன் இணைந்து தீர்வுகாண முற்பட்டிருந்தால் இன்று சிறந்த தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கும்.

தீர்வவை முன்வைப்பதற்காக எம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைத்திருக்கவில்லை” என்று முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீது கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கொழும்பு வார இறுதி நாளிதழ் ஒன்று கேள்வியெழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related posts

பெற்றோலுடனான கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் மன்னிக்கவும்-அமைச்சர்.

wpengine

வடக்கு மாகாண வைத்தியசாலைகளின் தாதியர்கள் நாளை பணிப் புறக்கணிப்பு

wpengine

50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு-கோட்டை நீதவான்

wpengine