பிரதான செய்திகள்

சாணக்கியனுக்கு கல்முனை நீதி மன்றம் அழைப்பாணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியில் கல்முனை நீதிமன்ற பிரதேசத்திற்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணை இன்று(செவ்வாய்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் பொலிஸாரினால் கையளிக்கப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று கல்முனை நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவினை மீறியதாக தெரிவித்தே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே நான் எவ்வாறு நீதிமன்ற தடை உத்தரவினை மீறினேன் என எனக்கு தெரியாது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கிழக்கு மாகாண சபையின் முதலைமைச்சர் வேட்பாளராக ஹசனலி?

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கையெழுத்து வேட்டை இன்று

wpengine

ஆளுனருக்கு எதிராக 217 வழக்கு தாக்கல்

wpengine