குழந்தை படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்தால் சிறைத் தண்டனை – பிரான்ஸ்

தங்களுடைய குழந்தைகளை புகைப்படங்களாக எடுத்து, அதை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவு செய்தால் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பேஸ்புக்கில் தங்களுடைய பிடித்த விஷயங்கள் அல்லது ஒரு செய்தியை பற்றிய தங்களுடைய கருத்துக்கள் ஆகியவற்றை பதிவு செய்வது என்பது போய், தன்னுடைய குடும்பப்புகைப் படங்கள், தங்களுக்கு பிறந்த பச்சிளம் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் பழக்கம் அனேகரிடம்; உள்ளது.

 மேற்கு நாடுகளில் இது இன்னும் அதிகம். ஆனால், அந்த நாட்டு அரசாங்கம் இதை சுலபாமக எடுத்துக்கொள்வதில்லை. குழந்தைகளின் தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்கிறார்கள். முக்கியமாக, பிரான்ஸ் நாட்டில் அதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அங்கு அனேக பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் செய்யும் வேடிக்கையான பல விஷயங்களை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்கின்றனர். இது அந்த குழந்தையின் தனிப்பட்ட உரிமைகளை பாதிப்பதாக அந்த நாடு கருதுகிறது.

 இதனால், தங்களுடைய குழந்தைகள் பற்றி அதிகமான, மோசமான புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று பிரான்ஸ் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares