பிரதான செய்திகள்

குருனாகல் இளைளுர்களோடு ஒரு புரட்சி! வேலைத்திட்டத்தை ஆரம்பித்த அசாருதீன் அமைப்பாளர்

குருனாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் ஓன்று சேர்க்கும் முகமாக “இளைஞர்களேடு ஒரு புரட்சி பயணம்” என்னும் வேலைத்திட்டத்தின் முதல் கட்ட நிகழ்வினை நேற்று மாலை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் குருனாகல் மாவட்ட அமைப்பாளரும்,லங்கா சதொசவின் நிறைவேற்று பணிப்பாளருமான  செய்னுல்தீன் முஹம்மட்ட அசாருதீன் ஆரம்பித்துள்ளார்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்;

இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகளில் அதிகமாக இனவாதிகளினால் விமர்சிக்கப்படுகின்ற அரசியல்வாதியாகவும்,பேரினவாதிகளினால் அச்சுருத்தலுக்கு ஆளாக இருப்பவராகவும்,எமது சமூகத்திற்கு எதும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை தட்டிக்கேட்கின்ற ஒரு தலைமையாகவும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் உள்ளார்.என்றும் இப்படியான சமுக சிந்தனையும்,இன,மத பேதங்களுக்கு அப்பால் செயற்படும் தலைவரின் கரங்களை பலப்படுத்த வேண்டிய தேவையும்,அவருக்கு  பின்னால் இன்றைய இளைஞர்கள் ஆகிய நாங்கள் செல்ல வேண்டிய தேவைப்பாட்டில்
இருந்து வருகின்றோம். எனவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் மதியாலை பிரதேச இளைஞர்களுக்கான அங்கத்துவ அட்டை மற்றும் விண்ணப்படிவங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள்,மௌலவிமார்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

பிரபல பத்திரிக்கைக்கு எதிராக ஜே.வி.பி. முறைப்பாட்டு

wpengine

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு ஆக்ஸ்போட்டில் இடம்

wpengine

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் ,றிப்ஹான் பதியுதீன் நடவடிக்கை எடுப்பார்களா?

wpengine