பிரதான செய்திகள்

குருநாகல் பகுதியில் அமைதியற்ற சூழ்நிலை ! ரணில் போன்னயா? (வீடியோ)

குருநாகல் – கொக்கரெல்லவை அண்மித்துள்ள பகுதியில் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் இடத்திற்குச் சென்ற பொதுபல சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர், பிரச்சினையொன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

 

இது குறித்து பொலிஸார் கருத்து வெளியிடுகையில்,

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பினைச் சேர்ந்த சிலர் குருநாகல் – கொக்கரெல்ல பகுதிக்குச் சென்று பிரச்சினைகளைச் செய்து வருவதாகவும், இதனால் அந்தப் பகுதியில் தற்பொழுது அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இது குறித்து தகவல் அறிந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்து அங்கு நிலவும் சூழல் குறித்து விசாரணை நடத்திவருவதாக தெரியவந்துள்ளது.

எனினும் பிரச்சினைக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

Related posts

அமைச்சர் டெனீஸ்வரன் நீக்கம்

wpengine

கிளிநொச்சி வெளிநோயாளர் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்

wpengine

Dr. Kelegama to Speak on the State of the Economy

wpengine