பிரதான செய்திகள்

குருகுலராஜா ஊழல் குற்றச்சாட்டு! பொருமை காக்கும் படி கூறிய மாவை

வட மாகாண கல்வி அமைச்சர் டி.குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த இராஜினாமா கடிதத்தை ஏற்காத மாவை சேனாதிராஜா, இன்னும் அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் இணக்கப்பாடு கிடைக்கப் பெறாமையால், பொருமையை கடைப்பிடிக்கும் படி குருகுலராஜாவிடம் கூறியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குருகுலராஜாவின் கட்டாயத்திற்கு அமைய, அந்த இராஜினாமா கடிதத்தை மாவை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், ஆனால் அது உத்தியோகபூர்வமான நடவடிக்கை அல்ல எனவும், இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கூறியுள்ளார்.

இதேவேளை, வட மாகாண சபை உறுப்பினரான குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வழங்கியது நகைப்புக்குரியது என, வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளதாக எமது செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இதுபோன்ற கடிதங்களை முதலமைச்சர் அல்லது சபை முன்னிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

முன்னால் அமைச்சரின் நீதி ஒதுக்கீட்டில் பாடசாலை நுழைவாயில்

wpengine

தேசிய செல்வத்தை ராஜபக்சவினர் பெருமளவில் கொள்ளையிட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் உண்டு

wpengine

இலங்கையில் மலேரியா நோயாளர்கள் கண்டுபிடிப்பு!

Editor