கட்டுரைகள்பிரதான செய்திகள்

கும்பிடு போட்டதை பேசிய ஜவாத்! அதை ரசித்துக்கேட்ட ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், மறைந்த அமைச்சருமான அஷ்ரப் வெள்ளிக்கிழமையில் ஜும்மாவுக்கு செல்லாமல் மலர் தட்டுடன் தீகவாவி புத்தர் சிலைக்கு முன் பூவை வைத்து கும்பிட்டார் அவருடன் நானும் இருந்தேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் கூறியுள்ளார்.

சமூக வலை தளங்களில் முஸ்லிம் தலைவர்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் போன்றவர்கள் பௌத்த மத குருமார்களை கும்பிடும் காட்சிகள் பரப்பப்படுகின்றன. இவை இஸ்லாத்தை நேசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

மட்டுமன்றி, முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் 07 வயதில் குர்ஆனை மனனமிட்டவர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அண்மையில் சிலைக்கு மாலை அணிவித்த வீடியோ காட்சி வெளியாகி பலத்த கண்டணத்தை பதிவாக்கிக் கொண்டது.இந்நிலையில், சிலைகளை கும்பிடுவதைப் பற்றி விமர்சிக்கப்படும் தம் கட்சித் தலைவர்களை காப்பாற்ற பூதம் போல் புறப்பட்டவர் தான் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மு.கா முக்கியஸ்தருமான ஜவாத்.குளிக்கப் போய் சேறு பூசிய கதையாக அமைந்தது இவரது அற்புத விளக்கம்.

கட்சியில் உள்ளவர்கள் சிலைகளுக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். கும்பிடுகிறார்கள் என்றெல்லாம் பரப்பப்படும் விமர்சனத்திற்கு பதிலளிக்க சென்றவர் “இவர்கள் மட்டுமா செய்கிறார்கள் மறைந்த மா மனிதர் (?) அஷ்ரபும் வெள்ளிக்கிழமை ஜும்மாவுக்கு செல்லாமல் மலர் தட்டுடன் தீகவாவிக்கு சென்று சிலையை கும்பிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிலையை வணங்குகிறாய். ஒரு முஸ்லிம் இப்படி செய்யலாமா? என்று கேட்டால்,
நான் மட்டுமா வணங்கினேன்? என் தலைவனும் தான் வணங்கினான். என்று பதிலளிக்கிறார் இந்த அறிவு மேதை?
நீ திருடன் தானே? என்று சொன்னால் நான் மட்டுமா திருடினேன் என் தலைவனும் தான் திருடினான் என்பது போல் தான் இவரின் பதில் அமைந்துள்ளது.

இவர்கள் தான் முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்கள் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொண்டு அழைகிறவர்கள்.

ஜவாதின் பேச்சை ரசித்த மு.கா தலைவர் ஹக்கீம்
——————————————
தனது கட்சியின் ஒரு உறுப்பினர் அல்லாஹ்வுக்கு எதிராக தாமும் தனது முன்னால் தலைவரும் நடந்தாக பேசிக் கொண்டிருக்கிறாரே என்ற அடிமட்ட சொரனை கூட இல்லாமல் ஜாவாதின் பேச்சை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீம்.

குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி தான் முஸ்லிம் காங்கிரஸ் என்று பேசும் இந்த வழிகேடர்கள் தங்கள் அரசியல் இலாபத்திற்காக குர்ஆனையும், ஹதீஸையும் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

#முன்னால் தலைவர் மலர் தட்டுடன் தீகவாவி சென்று சிலை வணங்கினார்.
#இந்நாள் தலைவர் மலர் தட்டுன் மஹாநாயக்க தேரர்களை வணங்கினார்.
#கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் (?) நஸீர் சிலைக்கு மாலை அணிவித்து கவுரவிக்கிறார் (?)

#ஜவாத் போன்ற கொத்தடிமைகள் அந்தக் காலம் முதல் இன்று வரை தலைவர்களுடன் இணைந்து தாமும் சிலை வணங்குகிறார்கள்.

இவர்கள் தான் முஸ்லிம் (?) காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி நடத்துபவர்கள்.

ஜால்ரா அடிப்பவன் யாராக இருந்தாலும், அவன் என்ன பேசினாலும் அதனை ஒரு தலைவன் ரசிக்கிறான் என்றால், அவன் நியாயமான, நீதியான தலைவனாக இருக்க மாட்டான் என்பதே யதார்த்தமானதாகும்.

பொது பல சேனாவில் சேர்ந்து சிலைகளுக்கு சேவகம் செய்ய வேண்டியவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் என்று ஏமாற்றிக் கொண்டு அழைகிறார்கள்.

அனைத்துக்கும் வழிகாட்டி அஷ்ரப் (?)
——————————————

முஸ்லிம் காங்கிரஸ் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த வழிகேடர்கள் தம் செயல்கள் அனைத்துக்கும் முன்னால் தலைவர் அஷ்ரபைத் தான் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

இன்று இவர்கள் செய்யும் எந்த அயோக்கியத் தனமாக இருந்தாலும் செய்து விட்டு இவர்கள் சொல்லும் பதில்தான் நாங்கள் மட்டுமா செய்தோம்? முன்னால் தலைவர் அஷ்ரபும் தான் செய்தார் என்பார்கள்.

நீங்கள் இன்று செய்தாலும் வழிகேடு வழிகேடுதான். உங்கள் தலைவர் அன்று செய்தாலும் வழிகேடு வழிகேடுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இஸ்லாம் வன்மையாக கண்டித்த சிலை வணக்கத்தையே பெறுமையாக சொல்லிக் கொள்ளும் ஜவாத் போன்றவர்கள் முதலில் கலிமா கூறி இஸ்லாத்தில் மீண்டும் இணைந்துகொள்ள வேண்டும்.

பரப்பப்படும் விமர்சனங்கள் இதுபோன்று தான் இருக்குமோ?
————————————-

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள் தொடர்பில் அண்மைக் காலமாக பலவிதமான விமர்சனங்களும் பரப்பப்படுகிறது.

அவர்களின் ஒழுக்கம், நேர்மை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் வெளியிடப்படுகின்றன.

ஒழுக்கம் இல்லாதவர்கள், குடிகாரர்கள், திருடர்கள் என்றெல்லாம் சமூக தளங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

ஜவாத் போன்றவர்களின் பேச்சுக்களை கேட்க்கும் போது இதுவெல்லாம் கூட உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.நாங்கள் மட்டுமா? என்று கேட்டு விட்டு இதற்கும் முன்னால் தலைவரையும் இணைத்துக் கொள்வார்களோ தெரியாது.

சிலை வணங்கும் மு.கா தலைவர்கள் விடயத்தில் முஃமின்கள் எடுக்க வேண்டிய முடிவு
உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம்.
அல்குர்ஆன் 60:04

Related posts

வாழ்ந்த இடங்களை துப்புரவாக்கும் போது வில்பத்து என்று இனவாதிகள் கூக்குரல்! றிஷாட் மீதும் போலி குற்றச்சாட்டு சிங்கள மக்கள்

wpengine

மன்னார், முசலியில் உயர்தர மாணவர்களுக்கான “சிப்தொர” புலமைப்பரிசில் வழங்கி வைப்பு!

Editor

மட்டக்களப்பு மாவட்டத்தில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு சீமெந்து-ஹிஸ்புல்லாஹ்

wpengine