உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

குத்தாட்டம் போட ரெடியான முதல்வர்: தடுத்து நிறுத்திய மனைவி

மத்திய பிரதேசத்தில் நடந்த தண்ணீர் திருவிழாவில் நடன கலைஞர்களுடன் சேர்ந்து முதல்வர் சிவ்ராஜ் சிங் நடனமாட சென்றது சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தின் இந்திரா சாகர் அணைப் பகுதியில் ஹனுவந்தியா என்ற தீவு உள்ளது.cm_shivraj_002

இதனை சுற்றுலா தலமாக மாற்றும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. இதற்காக படகு குழாம் மற்றும் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக கடந்த 12ம் திகதி முதல் தண்ணீர் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்காக 120 தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்க முதல்வர் சிவ்ராஜ் சிங் மனைவி சாதனா சிங்குடன் வந்திருந்தார்.

இவர்களை நடன கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர், அப்போது முதல்வரையும் நடனமாட அழைத்தனர்.

முதல்வரும் சென்ற போது, மனைவி கையை பிடித்து தடுத்து நிறுத்தினர், இச்சம்பவம் சிறிது நேரம் கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

Related posts

மீன் ஏற்றுமதி தடை! ஐரோப்பிய ஒன்றியத்தி்னால் நீக்கம்

wpengine

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு நிறைவு

wpengine

ஹிஸ்புல்லா, புத்தளம் மத்ரஸா பாடசாலையின் அதிபரான பாகிர் விளக்கமறியல்

wpengine