பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண சபைக்கு நாளை இறுதி நாள்

கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2012ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றது.

இதையடுத்து, மாகாண சபையின் பணிகள் செப்டம்பர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், அதன் ஐந்தாண்டு காலப்பகுதி எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
குறித்த ஐந்தாண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாண சபையில் 85 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இறுதி அமர்வு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, அது ஆளுநரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளது.

Related posts

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மஹிந்த ராஜபஷ்சவின் புகைப்படங்கள்

wpengine

பாரிய ஊழல் மோசடிகள் ரணில் விவாதம்

wpengine

அகில இலங்கை மக்கள் கட்சியின் பேராளர் நாட்டில் இந்தியா அரசியல்வாதிகள்

wpengine