பிரதான செய்திகள்

கிழக்கின் எழுச்சி! வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்துள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த குரலை நசுக்குவதற்காக இப்பொழுது பல உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அதன் வெளிப்பாடுதான் கிழக்கின் எழுச்சி என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சிய முஸ்லிம் தர்ம கொடை நிதி” அமைப்பினால்  மட்டக்களப்பு ஏறாவூரில் 500 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாதணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு  ஏறாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய முதலமைச்சர், தற்போது ஒற்றுமைப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களுக்குள் எவ்வாறோ குழப்பத்தை உருவாக்குவதற்குக் காத்திருந்த வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டில் பணத்துக்கு அடிமையாகும் ஒரு சில புல்லுருவிகள் பலிக்கடாவாகி விட்டார்கள்.

இது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இதற்கெல்லாம் முஸ்லிம்கள் மசிய மாட்டார்கள் என்பதை எதிர்காலம் பதில் சொல்லும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இலங்கை முஸ்லிம்களின் அடையாளக் குரலை நசுக்குவதற்கு அவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். அதற்கு நம்மவர்களில் உள்ள நயவஞ்சகர்கள் ஒரு சிலர் துணைபோயிருக்கின்றார்கள்.

இந்த விடயத்திலே முஸ்லிம் சமூகம் முன்னரை விட இனி மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியிருக்கின்றது.

கடந்த காலத்திலே முஸ்லிம்களை ஒரு இனமாகக் கூட அங்கீகரிப்பதற்கு தீவிரப்போக்குடையவர்கள் மறுத்து வந்த நேரத்தில் இலங்கை அரசியலுக்குள்  மு.கா உட்புகுந்ததன் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கென்று ஒரு தனித்தவக் குரலையும் அடையாளத்தையும் சர்வதேசமெங்கிலும் பெற்றுத் தந்தது.

இதனைச் சகித்துக் கொள்ள முடியாத உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் முஸ்லிம் சமூகத்தைப் பிளவுபடுத்த இப்பொழுது தமது காய்நகர்த்தல்களை முஸ்லிம் சமூக புல்லுருவிகளைக் கொண்டே ஆரம்பித்திருக்கின்றார்கள்.

Related posts

பிரபல ஊடகவியலாளர் பிக்கிர் அவர்களுடைய மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்

wpengine

ரணில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்! 30பேர் கொண்ட அமைச்சரவை

wpengine

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அறிந்துகொள்ள அரசியல்வாதிகளுக்கு உரிமை உண்டு! அமைச்சர் றிஷாட் தொடர்புகொண்டார்

wpengine