பிரதான செய்திகள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு வெள்ளம்! அமைச்சர் விஷேட கூட்டம்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைததுவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று(24-12-2018) காலை பத்து மணிக்கு விசேட கூட்டம் இடம்பெற்றது.

திடீரென ஏற்ப்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் கடும் பாதிப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளது இதன் விளைவுகள் மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முகமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் அவர்களின் வாழ்வாதார அழிவு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும்இ பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்புவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் உதவிகள் பற்றியும் இவ்விசேட கூட்டத்தில் ஆராயப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 10889 குடும்பங்களைச் சேர்ந்த 35808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 20 நலன்புரி நிலையங்களில் 2064 குடும்பங்களைச் சேர்ந்த 6882 பேரும் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் 755 குடும்பங்களைச் சேர்ந்த 2592 பேரும் உள்ளனர்.இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளை கொண்ட 77 கிராம அலுவலர் பிரிவுகளில் 6250 குடும்பங்களைச் சேர்ந்த 20737 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இவர்களில் பலர் 28 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா எம் ஏ சுமந்திரன் சி சிவமோகன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சாள்ஸ் நிர்மலநாதன் சி சிறிதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசங்க சு அருமைநாயகம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் திணைக்களங்களின் பணிப்பாளர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு இராணுவம் காவல்துறையினர் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts

இனவாதம் அற்ற சூழலை உருவாக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும் – கல்லெலுவையில் அமைச்சர் நஸீர்

wpengine

மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அ.இ.ம.கா வில் மீண்டும் இணைவு

wpengine

வை.எல்.எஸ் ஹமீதின் வினாக்களுக்கான தெளிவுகள்

wpengine