பிரதான செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை பார்வையிட்ட மன்னார் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்

கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்தி திறன் செயற்பாடுகளை மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரீன் தலைமையில் ஒரு குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த செயலக உற்பத்தி திறன் செயற்பாடுகளை மன்னார் வலயக்கல்வி உத்தியோகத்தர்கள் மற்றும் மன்னார் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் அடங்கிய குழுவே இன்று பார்வையிட்டுள்ளது.

தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால் அரச அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் பாடசலைகள் என பல நிறுவனங்களுக்கிடையே ஆண்டுதோறும் உற்பத்தி திறன் போட்டி நடைபெற்று வருகின்றது.

 

இந்த போ ட்டியில் 2015ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதன்முறையாக போட்டியிட்டு அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில், அண்மைக்காலமாக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசலைகள் என பல அமைப்புகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினை பார்வையிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் இன்று மாவட்ட செயலகத்தின் உற்பத்தி திறன் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கான வினைத்திறனுடன் கூடிய சேவையினை பார்வையிடுவதற்காகவும், ரூபவ் செயலக பணியாட்தொகுதியுடனான அனுபவப்பகிர்வினை மேற்கொள்வதை நோக்காக கொண்டும் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

Related posts

மேல்மாகாண சபையின் விவசாய, மீன்பிடி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் வடக்கு விஜயம்

wpengine

அமைச்சர் ஹக்கீம்,றிஷாட் பற்றி முகநூல் கற்பனை

wpengine

மன்னார்,முசலி பகுதியில் 3 கோடி 56 இலட்சம் கேரள கஞ்சா

wpengine