பிரதான செய்திகள்

கிளிநொச்சி செல்வா நகரில் அரைக்கும் ஆலை திறந்து வைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

(ஊடக பிரிவு)
கிளிநொச்சி மாவட்ட செல்வாநகர் கிராமத்துக்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சால் 2015 ஆம் ஆண்டு மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து 2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் செல்வாநகர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அமைக்கப்பட்ட  அரைக்கும் ஆலையை  நேற்று 27-04-2016 புதன் மாலை 4.30 மணியளவில் திறந்துவைத்தார் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

நிகழ்விற்கு வடக்கு மாகாணசபையின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் தவநாதன், அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன், மற்றும் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   35f70473-b42a-4b7c-8fe1-21f316d3c9992191ac50-85d6-4506-bd6a-bf369bd5aaaa

Related posts

விக்டோரியா மின் நிலையத்தில் திருத்தப் பணிகள் – அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை!

Editor

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அறிவிப்பாணை

wpengine