கிளிநொச்சி சென்ற ஊடக அமைச்சர்! தமிழ் பெண் பொட்டு வைத்து வரவேற்பு

அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடக பிரிவின் கிளிநொச்சி அலுவலகம் இன்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வருகை தந்திருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வரவேற்றுள்ளார்.


இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடக பிரிவின் கிளிநொச்சி அலுவலகம் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares