கிராம உத்தியோகத்தர்கள் ஓய்வு நாளைத் தவிர 6 நாட்களும் 24 மணி நேரம் பிரிவில் கடமை

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், கிராம உத்தியோகத்தர்களின் சேவைகள் தொடர்பில் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு சுற்றுநிரூபமொன்றை வௌியிட்டுள்ளது.

இதனடிப்படையில், கிராம உத்தியோகத்தர்கள் தமது ஓய்வு நாளைத் தவிர ஏனைய 6 நாட்களும் 24 மணித்தியாலங்கள் தமது பிரிவில் கடமைகளை முன்னெடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரையும் சனிக்கிழமைகளில் காலை 8.30 முதல் நண்பகல் 12.30 வரையிலும் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்களில் இருக்க வேண்டும் என குறித்த சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களின் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதுடன், மீதமுள்ள மூன்று நாட்களில் ஓர் தினத்தை ஓய்வு தினமாகப் பெற்று, ஏனைய இரண்டு நாட்களில் கள உத்தியோகத்தில் ஈடுபட வேண்டும் என உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares