உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கியூபா விமானம் விபத்து பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

கியூபா – ஹவானா விமான நிலையத்திற்கு அருகில் போயிங் விமானமொன்று விபத்திற்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

மூவர் மீட்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக கியூப ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹவானா விமான நிலையத்திலிருந்து ஹோல்குயினுக்கு புறப்பட்ட போயிங் 737 விமானம், சிறிது நேரத்தில் விபத்திற்குள்ளாகியது.

விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் என 110 பேர் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

மெக்சிக்கோவை சேர்ந்த 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளதுடன், ஏனைய பயணிகள் அனைவரும் கியூபாவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வௌியாகியுள்ளன.

தொழில்நுட்பக் கோளாறினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த விமானம் 1979 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனவும், கடந்த 39 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Related posts

மன்னார் பிரதேச செயலாளர் உள்ள ஆறு கிராமங்களில் கடல்நீர் புகுந்துள்ளது.

wpengine

இங்கிலாந்துடன் அரையிறுதியில் இணையும் பாக்கிஸ்தான்

wpengine

எரிபொருள் மோசடிகளை தடுக்க தொலைபேசி முறை அறிமுகம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர

wpengine