கிண்ணியா நகரசபையின் பிரதித் தவிசாளர் ஐ சப்ரீன் (ஐயூப் நளீம்), மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் தானீஸ் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இன்று (08) உத்தியோகபூர்வமாக வவுனியாவில் இணைந்து கொண்டார்கள்.
கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகரசபை, பிரதேசபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





