காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: “சிறுவர்கள் பலி”

காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறுவனது சகோதரர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹாமாஸ் மேற்கொண்ட ராக்கட் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாகவே, தாம் ஹமாஸின் 4 இலக்குகளை குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேலியப் படை தெரிவித்துள்ளது.

காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 4 ராக்கட்கள் இஸ்ரேலிய நகரான ஸ்தெரோவுக்கு அருகே உள்ள திறந்த வெளியில் வெடித்ததாக இஸ்ரேல் படை மேலும் தெரிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares