பிரதான செய்திகள்

காஷ்மீர் பிரச்சினை! எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரின் நிலை குறித்து காஷ்மீரின் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளனர்.

கடந்த 8-ம் தேதி ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 43-வது நாட்களாக காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. இதனால், மக்களின் இயல்வு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் கலவரத்தில் பலி எண்ணிக்கை 65-க்கும் மேலாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், விரைவில் இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று தலைவர்கள் பலர் ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில், உமர் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீரில் நடக்கும் வன்முறை குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஊடகவியலாளர் படுகொலை! முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

wpengine

கனடிய குடியுரிமை பெறும் மலாலா

wpengine

அரசியலில் மஹிந்த ஒய்வு!மீண்டும் அரசியலுக்கு வரும் பசில்

wpengine