உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காஷ்மீர் -பகிஸ்தான் எல்லையில் மீண்டும்

காஸ்மீரின் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில் 5 பொதுமக்களும், 2 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியத் தரப்பில் தாய் ஒருவரும், அவரது 2 பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் 2 படையினர் உட்பட மேலும் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானி அபிநந்தன் வர்தமன் பாகிஸ்தானினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானி அறிவித்தலை மீள பெறாவிட்டால் பாரிய போராட்டம்.

Maash

5,000 மதத் தலங்களில் சூரிய மின் தகடுகள் ..!

Maash

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் -அஸாத் சாலி

wpengine