காமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்

கத்தோலிக்க பிரிவினர் கடைபிடிக்க வேண்டியவை தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க பிரிவினர் பின்பற்ற வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டியவை குறித்த வழிகாட்டுதல்கள் அடங்கிய Joy of Love என்ற புத்தகத்தை போப் பிரான்ஸில் வெளியிட்டுள்ளார்.

அதில், திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறத்தை அனுபவிக்க வேண்டும்.pope_doctrine_003

காமம் என்பது தீய ஒன்று என்றும் குடும்பத்தின் நன்மைக்காக சகித்துக்கொள்ள வேண்டிய சுமை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதனால் காமம் என்பது இறைவன் நமக்கு அளித்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார். தேவாலயத்தின் கோட்பாடுகளில் எந்த மாற்றங்களையும் அவர் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும், திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக போதனைகளில் தெரிவித்திருப்பதற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தேவாலயமே எப்போது கல் எறியும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

நற்போதனைகளுக்கு வடிவம் கொடுப்பதற்காக நாங்கள் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதனை மாற்றி அமைப்பதற்கு அல்ல என்றும் புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், கரு தடுப்பு மற்றும் மறுமணம் செய்தவர்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஓரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஓரின சேர்க்கை தொடர்பான விவகாரத்தில் பழைய நிலை அப்படியே தொடரும் என்று போப் பிரான்ஸில் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான நிலை தொடரும் என்ற தகவல் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் உள்ள பரந்தகொள்கை உடையவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares