பிரதான செய்திகள்

காத்தான்குடி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

கடலில் வலைகளை திருடுவதற்கும் வலைகளை சேதப்படுத்துவதற்கும் எதிராக காத்தான்குடி மீனவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலை  10  மணியளவில் காத்தான்குடி கடற்கரைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுள்ளது.

இதன் போது தேற்றாத் தீவு,  களுதாவளை ஊர்களை சேர்ந்த சில மீனவ குழுவினர் காத்தான்குடி வாழைச்சேனை, கல்முனை மீனவர்களின்  மீன்களை திருடுவதை கண்டித்தது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

குறித்த ஆர்ப்பாட்டம் நிறைவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் காத்தான்குடி பிரதேச செயலகம் வரை  சென்று மகஜரும் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

முல்லைத்தீவில்  ஏழு நாட்களாகக் காணாமல் போயுள்ள வயோதிப தாய் . .!

Maash

வீதியில் இறங்கிய மக்களின் போராட்டங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

wpengine

கல்முனை மாநகர வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் ஹக்கீம் (படம்)

wpengine