காத்தான்குடி பொலிஸ் பிரில் சட்டவிரோத மண் அகழ்வு

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நரசிம்ம ஆலயத்தை அண்டிய கடற்கரைப்பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இயந்திரத்தினை பயன்படுத்தி மணல் அகழப்பட்டு கனகரக வாகனத்தில் ஏற்றி கல்லடி வழியாக கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.625.0.560.350.160.300.053.800.1280.160.95 (2)

மண் அகழ்வு இடம்பெற்ற பிரதேசத்தில் உபபொலிஸ் நிலையம் ஒன்று இருந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.625.0.560.350.160.300.053.800.1280.160.95 (3)

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares