பிரதான செய்திகள்

காத்தான்குடி பொதுச் சந்தையில் தீ! 3 கடைகள் நாசம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பொதுச் சந்தையில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்வத்தினால் சுமார் 25 இலட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

காத்தான்குடி பொதுச் சந்தையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரபல்யமான வர்த்தக நிலையமான அஸ்ரப் என்பவரின் பலசரக்கு கடைகளே இவ்வாறு எரிந்துள்ளன.

தீ விபத்திற்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பொது மக்களின் உதவியுடன் ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று நாள் விஷேட ரமழான் சன்மார்க்க கருத்தரங்கு மற்றும் சொற்பொழிவு- டோஹா கட்டாரில்

wpengine

26 பேரின் உயிரைப் பறித்த படகு விபத்து – பிலிப்பைன்ஸில் சம்பவம்!

Editor

மஹிந்தவின் பொதுஜன பெரமுண இரண்டாவது ஆண்டு நிறைவு

wpengine