பிரதான செய்திகள்

காத்தான்குடி நீர் ஓடையில் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட 3அடி முதலை மட்டு-வாவியில் விடுவிப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06 ஆம் குறிச்சி டீன் வீதியிலுள்ள நீர் ஓடை ஒன்றில் இருந்து சுமார் 3அடி சிறிய முதலை பொது மக்களால் நேற்று 31 வியாழக்கிழமை இரவு வேளை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதலையை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று 01 வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடியில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.0fd002ad-ff18-4215-b34d-7bb637ed22cf
மேற்படி 3அடி சிறிய முதலை தொடர்பில் மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி என்.சுரேஷ்குமாரிடம் வினவிய போது காத்தான்குடியில் நேற்று இரவு பிடிக்கப்பட்ட 3 அடி முலலை மட்டக்களப்பு வாவியில் இருந்து வந்திருப்பதாலும், மக்களுக்கு ஆபத்து விளைவிக்கின்ற பெரிய முதலை இல்லை என்பதாலும் மட்டக்களப்பு வாவிக்குள் இம் முதலையை விட்டதாகவும்,இம் முதலையில் எந்த காயமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Related posts

அமைச்சு பதவிகளை அப்படியே தருகிறோம்! விக்னேஸ்வரன் பக்கம் வாங்க

wpengine

மன்னார், தள்ளாடியில் ஆணின் சடலம்! வயது 50

wpengine

WhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்

wpengine