காத்தான்குடி நகரை அதி சிறந்த சுத்தமான நகராக திகழ வைக்கும் வேலைத்திட்டம் -காத்தான்குடி நகர சபையினால் முன்னெடுப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரை அதி சிறந்த சுத்தமான நகராக திகழ வைக்கும் விஷேட வேலைத் திட்டம் காத்தான்குடி நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காத்தான்குடி நகர சபையின் விஷேட ஆணையாளரும்,செயலாளருமான ஜே.சர்வேஸ்வரின் வழிகாட்டலில் காத்தான்குடி நகர சபை சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களின் உதவியுடன் மேற்படி திட்டம் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.fdeb2b4a-81b5-4cdf-bdaa-8540df6e98b1
குறித்த விஷேட வேலைத் திட்டத்திற்கு அமைவாக காத்தான்குடி பிரதேசத்தில் மக்களால் அதிகமாக பாவிக்கப்படும் காத்தான்குடி கடற்கரை வீதியில் வடிகான்கள் மற்றும் வீதிகளில் காணப்படும் மண்கள்,தூசிகள்,குப்பைகள் என்பற்றை முற்றாக அகற்றும் நடவடிக்கை அண்மையில் இடம்பெற்றது.0355deca-4c8f-41fe-92ad-d0839b52bcf5
இதன் போது காத்தான்குடி நகர சபை சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களினால் மேற்படி வீதியில் அசுத்தமாக வடிகான்கள் மற்றும் வீதிகளில் காணப்படும் மண்கள்,தூசிகள்,குப்பைகள் என்பற்றை முற்றாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் வீதியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை,மத்திய கல்லூரி,கடற்கரை ,சிறுவர் பூங்கா ,வியாபார நிலையங்கள்,பள்ளிவாயல்கள் போன்றவை காணப்படுகின்றன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares