பிரதான செய்திகள்

காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் விஜயம்-பால் நிலை அடிப்படையிலான வன்முறையை குறைப்பது தொடர்பில் ஆராய்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அண்மையில் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

வைத்தியசாலையில் அமைந்துள்ள பால் நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் மையத்தினை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் வைத்தியசாலை அத்தியட்சகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.0bda91be-26ac-46a4-9e5b-2810a51100c7

இதன்போது வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிரினால் உளவள ஆலோசனை பணியாளர்கள் பற்றாக்குறை,சிறுவர்களுக்கான தனி அலகு,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறுவர்கள் பொழுது போக்குவதற்கான சிறுவர் பூங்கா,விளையாட்டு உபகரணங்கள்,அத்தியாவசியப்  பொருட்கள் என்பன தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் அது தொடர்பில் கவனமெடுத்து விரைவில் அவற்றை செய்து தர நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.f80f1e6f-9561-4d20-9f4a-09ac433fafcd

இக்கலந்துரையாடலின் போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார,அமைச்சின் அதிகாரிகள்,காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்;.எஸ்.எம்.ஜாபிர்,காத்தான்குடி தள வைத்தியசாலை பால்நிலை நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் மையத்தின் இணைப்பாளர் இராஜலக் ஷ்மி,வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

மன்னாரில் இருந்து முசலி ஊடாக புத்தளம் சென்ற 43வது தீபம்

wpengine

தேசிய அடையாள அட்டையில் மாற்றம்

wpengine

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு!

wpengine