காத்தான்குடியில் மூடப்பட்டிருந்த வீட்டில் திடீர் தீ விபத்து

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி- 4ஆம் குறிச்சி உமர்தீன் வீதியிலுள்ள மூடப்பட்டிருந்த மாடி வீடொன்றில் இன்று  தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி தீயினால் குறித்த வீட்டின் உட்பகுதி எரிந்துள்ளதுடன் வீட்டு உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த வீட்டில் ஏற்பட்ட திடீர் தீயை அயலவர்கள், பொது மக்கள் ஆகியோர்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares