காதீ நீதி மன்றத்தை அவமதித்தவருக்கு நீதி மன்ற பிடியானை

(அஷ்ரப் ஏ சமத்)

கல்கிசை மஜிஸ்ரேட் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் காதி நீதிமன்றத்தில் காதீநீதிமன்றத்தை அவமதித்தவருக்கு கல்கிசை நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு காதீநிதாவான்  தேசமாண்ய எம்.வை பாவா (ஜே.பி) தெரிவித்தாா்.

இவ் வழக்கு சம்பந்தமாக காதீநீதாவான் தகவல் தருகையில்

 

திருமணம் முடித்து 2 மாதம்  மனைவியையும் இருந்து விட்டு அவள் கர்ப்பவதியாகி  தற்பொழுது 5 மாத குழந்தை ஒரு வருடமாக  நடு வீதியில் விட்டு விட்டு, அக்குழந்தைக்கம் தாய்க்கும்  பராமறிப்பு பணம் கூட செலுத்தாமலும், இவ்வாறானவா்களுக்கு இரண்டாம் தரம் திருமணம் முடிப்பதற்கு  பெண் கொடுக்கும் பெற்றோருக்கும் காதி நீதிமன்றத்தின் சட்ட திட்டம் கௌரவம்  போனாதவர்களுக்கும்  மேற்படி நபருடைய சம்பவம் படிப்பிணையாக இருக்கும். அத்தோடு எம் சமுகத்தில் இப்படியான சீர்கேடுகளை அம்பளப்படுத்துவது எமது கடமையாகும்.

காதீநீதிமன்றத்தை அவமதித்து ரகலை ஈடுபட்டருக்கு எதிராக கல்கிசை பொலிசாா் வழக்கு தாக்குதல் செய்யதுள்ளனா்.

கடந்த 28.05.2016 கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் உள்ள கொழும்பு மேற்கு காதி நீதிமன்றத்தில் முறை கேடாக  நடந்தவா் மீது கல்கிசை நீதிமன்றம் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டு 13.06.2916ல் நீதிமன்றில் அஜராகுமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேற்கு காதி நீதிபதி முன்னிலையைில்  பேருவளையைச் சோ்ந்த இப்பான் சருக் என்பவா்  தெஹிவளைச் சோ்ந்த ஒரு முஸ்லீம் பெண்னை திருமணம் முடித்து மனைவி கருத்தரித்து 2 மாதத்தின் பின் 2015.04.15ஆம் திகதி மனைவியை பிரிந்து சென்றுள்ளாா். 2015.12ஆம் மாதம் கொழும்பு தெற்கு போதான வைத்தியசாலையில் மனைவி குழந்தையை பெற்றெடுத்துள்ளாா்.  குழந்தை பிறந்தவுடன் வழக்குத் தாக்குதல் செய்துள்ளாா்.  இவ் வழக்கு விசாரனைக்குச் சமுகமளித்த இவரது மனைவி தனக்கும் தனது குழந்தைக்கும் பராமரிப்பு கேட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இவற்றைக் கவணத்தில் கொண்ட காதிநீதிபதி   மனைவி குழந்தை பராமரிப்புக்கு மாதாந்தம்  20ஆயிரம் ருபா வழங்கும்படியும்  அவற்றைச் செலுத்திய பின் தலாக்கு கொடுப்பதாகும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இர்பான்  தனக்கு இரண்டாம் திருமணமாக பேருவளையைச் சோ்ந்த ஒரு பெண்னை திருமணம்  செய்வதாக அறிவித்திருந்தாா்.  அதற்காக பேருவளை காதி நீதிமன்றம் பள்ளிவாசல், திருமணப் பதிவாளா்களுக்கும்  அறிவித்துள்ளாா். கடந்த 28.05.2016ஆம திகதி  இவ் வழக்கு  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மேற்படி வழக்கு ஏற்கனவே தீா்ப்பு வழங்கப்பட்ட மனைவிக்கு குழந்தை பராமரிப்பு வழங்கப்படாமை. தலாக் பெறாமையினாலும் , மனைவியின் சம்மதம் பற்றி இரண்டாம் திருமணம் செய்வது அறிவிக்கப்படாமல் எவ்வாறு இவா் இரண்டாம் திருமணம் முடிப்பதற்கு பிடிவாதம் பிடிக்கின்றாா்.

தனது 5 மாத குழந்தைக்கு பராமரிப்பு செலுத்த முடியாத  நபா்  இரண்டாவது மனைவியை எப்படி பராமரிக்க போகின்றாா். என்றதும் இவா் ஆத்திரமடைந்து (வாதி) நீதிமன்றத்தில் அவமதிப்பு செய்தாா். இச்சம்பவம் காதி நீதிபதியினால் கல்கிசை பொலிசில் முறையிடப்பட்டது. பொலிசாா் இர்பான் சருக் எதிராக கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமா்ப்பித்துள்ளனா். இவா் காதீ நிதவானது கடமைக்கு இடையுரு விழைவித்தமை அச்சுருத்தியமை எனபன இவா் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  இந் நிலையில் 31.05.2016ஆம் திகதி இவ் வழக்கு கல்கிசை நீதிபதி எம். சகாப்தீன் விசாரனைக்கு எதிா்வரும் 2016.06.13ஆம் இா்பான் ஆஜராகுமாறும் கோரப்பட்டுள்ளது.

இவரின்  மனைவி தமது கற்பகாலம், தொட்டு 15 மாதம் குழந்தை சுமந்து பெற்று பின் 5 மாதம் குழந்தை வளா்ப்புக்கள் பட்ட கஸ்டங்களை  கண்னீராக வடிக்கின்றாா். இந் நிலையில் இவா் இன்னும் ஒரு திருமணம் முடிப்பதற்கு  எமது சமுகத்தில் பெண்கொடுப்பதற்கும் பெற்றோா்கள் ஏன் முன்வருகின்றனா். ஏற்கனவே ஒரு பெண்னுக்கு நடந்துள்ள சம்பவத்தை சற்று சிந்தித்து பாா்ப்பதில்லையா ?

இவ்வாறானவா்களுக்கு மனைவியை குழந்தையையும் பராமரிக்கப்படாமல் ஏற்கனவே ஒரு தாயையும் குழந்தையும் நடு வீதியில் விட்டுவிட்டு விவகாரத்து பெறாமலேயே இரண்டாம் திருமணம் செய்வதற்காக பெண்கொடுக்கும் பெற்றோருக்கும்  காதி நீதிமன்றத்தின் கௌரவத்தை பேன முடியாதவா்களுக்கு ஒரு படிப்பிணையாக உள்ளது. அத்தோடு என் சமுகத்தில் இப்படியான சீா்கேடுகளை அம்பளப்படுத்துவது எமது கடமையாகும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares