செய்திகள்பிரதான செய்திகள்

காதலியின் நிர்வாண படங்களை பகிர்ந்த அனுராதபுரத்தைச் சேர்ந்த பிக்கு.

தன்னுடைய காதலியின் (சட்டப்படி கணவரைக் கொண்ட) நிர்வாண புகைப்படங்களை, இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட பௌத்த துறவிக்கு இலகு வேலையுடன் கூறிய ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு துறவிக்கே, கொழும்பு பிரதான நீதவான்  தனுஜா லக்மாலி, இந்த தண்டனையை வியாழக்கிழமை (12) விதித்தார்.

 பௌத்த துறவி தனது காதலியிமிருந்து பிரிந்த பிறகு அவர் நெருக்கமாக இருந்த வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்காக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 2,500 அபராதமும் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்குமாறும் நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு அவர் இந்த தண்டனையை விதித்தார்.

சந்தேக நபரான துறவியும் முறைப்பாட்டாளரும் வாட்ஸ்அப் மூலம் சந்தித்ததாக நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்த சிஐடி. அவளை அடையாளம் கண்ட பிறகு, துறவி முறைப்பாட்டாளரை அனுராதபுரத்தில் யாத்திரை செய்ய அழைத்தார்.

Related posts

மன்னாரை சேர்ந்த இளம் பெண் மரணம்! பலர் சோகத்தில்

wpengine

எதிர்வரும் ஜூன் மாதம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டம்!

Editor

சர்வகட்சி மாநாடு!பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடல்ஆலோசனை

wpengine