காதலிப்பதற்காக தொலைக்காட்சிக்கு சென்ற யோஷித்த ராஜபக்ச!

சீ.எஸ்.என் தொலைக்காட்சிக்கும் யோஷித்த ராஜபக்சவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவரது சகோதரரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் யோஷித்தவின் காதலி பணியாற்றியதன் காரணமாகவே அவர் அங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த பெண்ணை யோஷித்த திருமணம் செய்து கொள்ளவிருந்தார். அத்துடன் அவரது நண்பர்கள் சிலரும் அங்கு தொழில் புரிந்து வந்தனர்.

நாங்கள் எதற்கும் உதவி செய்வோம். அது போல சீ.எஸ்.என் தொலைக்காட்சிக்கும் உதவினோம்.

யோஷித்தவின் காதலி அங்கு இருந்தால், நாங்களும் அங்கு அடிக்கடி சென்று வந்தோம் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares