காதலித்து திருமணம்! மனைவி மீது கணவன் சந்தேகம் இருவரும் தற்கொலை

தமிழகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவனும் அடுத்த சில மணி நேரங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகையைச் சேர்ந்தவர், சிவகுமார்(31). சிற்ப தொழிலாளியான இவருக்கு சரண்யா(24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


இந்த தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் என இரண்டு மகன்கள் உள்ளனர்.


இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு விதி இருந்ததால், சிற்ப தொழிலாளியாக இருந்த சிவக்குமாருக்கு வேலையில்லை.
இதனால் கீரை வியபாரம் செய்து வந்துள்ளார்.


இதையடுத்து, சம்பவ தினத்தன்று இரவு, 10:00 மணியளவில், அளவுக்கு மீறிய மது போதையில் வந்த சிவக்குமார், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, திட்டினார்.


இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் மனமுடைந்த சரண்யா, நள்ளிரவில் வீட்டில் துாக்கு போட்டு கொண்டார்.


அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், சரண்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, வீட்டிற்கு சென்ற சிவகுமார், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


காதலித்து திருமணம் செய்தும் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இப்போது இரண்டு பேருமே தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares