பிரதான செய்திகள்

காதலிக்காக தந்தையினை கொலைசெய்த மகன்! 8வருடத்தின் பின்பு உடல் மீள எடுத்தல்

காதல் திருமணத்திற்காக இணக்கப்படாத தந்தையொருவரை அவரது மகன் கொலை செய்த சம்பவம், வாதுவ , மாவலகுறுந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

60 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான குறித்த குடும்பஸ்தருக்கு நான்காவது பிள்ளையாவார் சந்தேக நபர்.
தனது காதலுக்கு தந்தை விருப்பம் தெரிவிக்காததை தொடர்ந்து தந்தையார் தனிமையாக வீட்டில் இருக்கும் சந்தர்ப்பதை எதிர்பார்த்து கொண்டிருந்த மகன், தந்தை தனியாக வீட்டில் உறங்கி கொண்டிருப்பதை அவதானித்தார்.

சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்த கொண்ட மகன், வீட்டிற்குள் சென்று கதவை எவராலும் திறக்கமுடியாதவாறு தாழிட்டு, தந்தையை நோக்கி சென்றுள்ளார்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த தந்தையின் சுவாசத்தினை தலையணை மூலம் இறுகச் செய்து ஈவிரக்கமின்றி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவருடைய நண்பர் ஒருவரை அழைத்து அதிகமாக மதுபானம் அருந்திவிட்டு நண்பரின் முச்சக்கரவண்டியில் தந்தையின் சடலத்தினை மயானம் நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.
தனது தந்தை முழுமையாக இறந்து விட்டார? அல்லது முக்திபெறுவதற்கு துடித்து கொண்டுள்ளார? என்பதனை கூட அறியாமல் இருவரும் மதுபோதையில் தந்தையை பூமிக்கு தானம் செய்துள்ளனர்.

பின்னர் இருவரும் காவல்துறை நிலையத்திற்கு சென்று தந்தையை காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர்.
தந்தையை கொன்றதன் பின்னர் சிறிது காலம் தனியாக வீட்டில் வசித்த குறித்த மகன், தாம் விரும்பிய யுவதியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணம் செய்து கொண்ட குறித்த மகன் 3 பிள்ளைகளுக்கு தந்தையானதுடன் கொன்று புதைத்தை தந்தை தொடர்பிலும் சிந்திக்க மறந்து வாழ்ந்தனர்.
எனினும் காவல்துறையினர் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென தந்தையை கொன்ற மகனும் மகனுக்கு உதவிய நண்பனையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, தந்தை புதைக்கப்பட்டிருக்கும் இடத்தினை அறிந்து கொண்டதோடு, நீதிமன்றத்தின் அனுமதிக்கமைய விசாரணைகளுக்காக இன்றைய தினம் மீண்டும் தோன்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts

கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்

wpengine

ஒரே தடையில் 8 தொலைபேசி அழைப்புகளை எடுக்க முடியும்! ஒருவர் கைது

wpengine

60 கோடி பெறுமதியான 2 பென்ஸ் கார்களை இறக்குமதி செய்யும் மைத்திரி!

wpengine