உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

காதலனை கரம்பிடிக்க அரச குடும்ப அந்தஸ்தை இழக்க இருக்கும் ஜப்பான் இளவரசி

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் பேத்தியும், 25 வயதான இளவரசியுமான மாகோ, டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழத்தில் படித்து பட்டம் பெற்றவர். 25 வயதான இளவரசி மாகோ கல்லூரியில் படிக்கும்போதே உடன் படிக்கும் கெய் குமுரோ என்பவரிடம் காதல் வயப்பட்டார்.

இந்நிலையில், கெய் குமுரொவை தான் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொண்டு வாழவிரும்புவதாகவும் தன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் இளவரசி மாகோ. அவரின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர்கள், திருமணத்திற்கு பிறகு மாகோ, தன்னுடைய இளவரசி பட்டத்தை துறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், ஜப்பான் அரசு குடும்ப விதிமுறைகளின் படி, அரச குடும்பத்தை சார்ந்தவர்கள், அரச குடும்பத்தை சார்ந்த ஒருவரைத்தான் திருமனம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு மாறாக திருமணம் செய்துகொண்டால் அவரின் பட்டம் பறிக்கப்படும்.

இதையடுத்து, இளவரசி பட்டத்தைக்காட்டிலும் தன்னுடைய காதலனுடன் சேர்ந்த வாழ்வதே முக்கியம் என கருதிய மாகோ, விரைவில் தன்னுடைய காதலனை மணமுடிக்கப்போவதாகவும், இதற்காக தன்னுடைய இளவரசி பட்டத்தை துறக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

Related posts

புத்தளம் மக்களுக்கு மட்டும் ஜனாஸா அடக்க நான் இடம் தருகின்றேன் கே.ஏ.பாயிஸ்

wpengine

40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

wpengine

அரசியல்வாதிகளில் பணக்காரர்களான மஹிந்த,மைத்திரி,ரணில் இரு தமிழர்

wpengine