செய்திகள்பிரதான செய்திகள்

காட்டுத் தீ பரவும் அபாயம்! சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்.

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக, பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

காட்டுத்தீ பரவல் தொடர்பான தகவல்களை, 117 என்ற துரித இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டும் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர், பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை

wpengine

வவுனியாவில் புதிதாக பியர் விற்பனை நிலையம்! மக்கள் விசனம்

wpengine

பொதுபல சேனா முறைப்பாடு!அமைச்சர் றிஷாட் ,சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு எதிராக விசாரணை

wpengine