பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகத்துக்கு அருகில் சுமார் 50 ஏக்கர் காணியை இலங்கை துறைமுக அதிகார சபையிடம் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக, துறைமுகத்துக்கு அருகாமையில் 15 ஏக்கர் அரசாங்கத்துக்கு சொந்தமான காணி ஒன்றை 52 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டமைக்கு அமைவாக பொறுப்பேற்பதற்கும் தனியார் உரித்துடைமையின் கீழ் மேலும் 32 ஏக்கர் காணிக்கு இழப்பீட்டை செலுத்தி காணியை பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டதாக பொறுப்பேற்பதற்கும், துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்க ஊழியர்களுக்கு இன்றுமுதல் அமுலாகும் புதிய நடைமுறை

wpengine

மகளின் காதலன் வீட்டுக்குள் புகுந்ததால் உலக்கையால் அடித்துக்கொலை .

Maash

அமைச்சர் றிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டும் சாகர தேரர்

wpengine