கவனிப்பாரற்று இருந்த பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனம் – சாணக்கியன் நடவடிக்கை

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கலின் போது மாறி வந்த அரசாங்கங்களினால்
பட்டதாரி பயிலுனர்களாகவே நியமனம் வழங்கப்பட்டது.


அந்த வகையில் 2018ல் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள்
நாடளாவிய ரீதியில் நிரந்தர நியமனமாக மாற்றி கொடுக்கப்பட்ட நிலையில்
மட்டக்களப்பில் பல பட்டதாரிகளுக்கு அந்த நிரந்தர நியமனம் வழங்கப்படாமல்
கவனிப்பாரற்று இருந்துள்ளனர்.


அவ்வகையான 29 பட்டதாரி பயிலுனர்கள் கிழக்கு மாகாணத்தின் பொதுச்சேவை
ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையிலும் உள்வாங்கப்படாமல்
தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.

குறித்த அனைவருக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தொடர் முயற்சியின் பயனாக நிரந்தர
நியமனம் வழங்கப்படுவதற்கான நேர்முகப்பரீட்சைக்கான அழைப்பு கடிதம்
கிடைத்துள்ளது.


இது தொடர்பாக இரா.சாணக்கியன் கருத்து  தெரிவிக்கையில் “பல வருடங்களாக
பல்வேறுபட்ட கஷ்டங்களின் மத்தியில் கல்வி கற்று தொழில் இல்லாமல்
புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுவும் இவர்களுடன் பட்டதாரி பயிலுனர் நியமனம் கிடைத்தவர்களுக்கு நிரந்தர
நியமனம் கிடைத்துள்ள போது இவர்களுக்கு கிடைக்காமை என்பது ஏற்றுக்கொள்ள
முடியாதது.


நானும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையும் இணைந்து பொதுநிர்வாக
அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு
இவர்களுக்கான நியமனம் பெறுவதற்கான நேர்முகப்பரீட்சைக்கான அழைப்பு கடிதத்தை
பெற்றுக்கொடுத்துள்ளோம்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை பொதுநிர்வாக
அமைச்சில் நடைபெறவுள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares