களனி கங்கையின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

கொழும்பு மாநகரில் ஏற்பட்டிருந்த வௌ்ளம் தற்போது வடிந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்துடன் களனி ஆற்றில் நாகலகங் வீதியின் நீர் மானியில் நீர் மட்டம் 6.8 அடிகள் வரை குறைவடைந்துள்ளதாக திணைக்களம் கூறுகின்றது.

இதற்கமைய நாகலகங் வீதியின் நீர் மானியில் 7 அடிகள் வரை நீர்மட்டம் உயர்வடைந்தால் மாத்திரமே பெரு வௌ்ள அபாயம் ஏற்படும என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை வங்காளா விரிகுடாவில் நிலை கொண்டிருந்த ரொஆனு சூறாவளி தற்போது காங்கேசன்துறை பிரதேசத்தின் 1100 கிலோமீற்றர் தூரத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியது.

இதன் மூலம் நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் ஸாலிஹீன் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares