கல்பிட்டி பிரதேச செயலாளர் பெண் கிராம உத்தியோகத்தருடன் பாலியல் சேட்டை

கல்பிட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒரு பெண் GS தனது கடமை நேரம் தனது கடமை சம்மந்தமான ஒரு விடயத்தை சொல்வதற்காக கல்பிட்டி பிரதேச செயலாளர் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அந்த தொலைபேசி அழைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கல்பிட்டி AGA அவர்கள்,
கடமை சம்மந்தமான விடயத்திற்கு முன்னுரிமை கொடுக்காது அந்த GS உடன் ஆபாசமான அருவருக்கத்தக்க செக்ஸ் வார்த்தைகளை பேசி அந்த பெண் GS ஐ தர்மசங்கடத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

அந்த பெண் GS யின் போனில் ஏற்கனவே ரெகோடிங் போடப்பட்டிருந்ததால் இந்த உரையாடல் ரெகோடாகி தற்போது சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.

அரச தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களை அந்த நிறுவனங்களின் ஆண் மேலதிகாரிகள் பாலியல் ரீதியாக தொல்லை படுத்துவதையும்,
அப்பாவி பெண்களின் மானத்தை விளையாட்டு பொருளாக நினைப்பதையும்,
அவர்களின் மனோநிம்மதியை சிதைத்து உளவியல் ரீதியாக அவர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்குவதையும்
அரசாங்கமோ, பொதுமக்களோ, மகளிர் அமைப்புக்களோ கைகட்டி வாய் மூடி பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

பொதுமக்கள் இது விடயத்தில் தங்களின் எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன்
அரசாங்கம் சம்மந்தப்பட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்வதன் மூலம் அல்லது தகுந்த தண்டனை கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பிற்கான ஒரு உத்தரவாதத்தையும் தைரியத்தையும் கொடுக்க முடியும்.

நன்றி
உவைஸ்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares